ஸ்ரீ ஜெகத்குரு சேவாஸ்

ஆலய உழவாரப் பணி அமைப்பு


இவ் அமைப்பு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்யும் உழவாரப்பணியினை செய்து வருகிறது.
இறைவனை தொட்டு தொட்டு பணி புரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்

எங்களுக்கு உழவாரப்பணியினை வழிகாட்டிய சிவ அருளாளர்  திரு VC சிவகுமார் ஐயா அவர்களுக்கு ஸ்ரீஜெகத்குரு சேவாஸ் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரசித்தி பெற்ற கோவில்களில் பணி விபரங்கள்:

  • சபரிமலை சந்நிதானத்தில் உழவாரப் பணி செய்த முதல் அமைப்பு என்ற பெருமை.
  • தலை எழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மா கோவில் உழவாரம்
  • தென்காசி, திருக்குற்றால கோவில்களில் உழவாரம்
  • திருவாரூர் கோவிலில் கும்பாபிஷேக உழவாரம்
  • இராமேஸ்வரம் கோவிலில் இரு முறை 400 க்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்ட உழவாரம்
  • திருவெண்காடு கோவிலில் உழவாரம்.
  • ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி சந்திரகிரி குளப்பணி உழவாரம்.
  • ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீசைலம் கோவிலில் உழவாரம்.ஆந்திரா மாநிலத்தில் துவாரகா திருமலா கோவிலில் உழவாரம்.
    இவ் அமைப்பு இது வரை சுமார் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் உழவாரப் பணி செய்துள்ளது.
  • நமது அமைப்பு 2023 நவம்பர் மாத கடைசியில் குஜராத்தில் உள்ள சோம்நாத்,துவாரகா மற்றும் நாகேஷ்வர் ஆகிய ஊர்களில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கோவில்களில் 350 இறை அன்பர்களுடன் ஐந்து நாட்கள் உழவாரப்பணி செய்ய உள்ளது

சித்தர்கள் வாழும் சதுரகிரி யாத்திரை

2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மார்கழி முதல் தேதியில் சுமார் 200 பக்தர்களுடன் சித்தர்கள் வாழும் சதுரகிரிக்கு மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய யாத்திரை செல்வது வழக்கம்.


சமூக
சேவை

திருவண்ணாமலையி்ல் ஒவ்வொரு சித்திரா பௌர்ணமி,கார்த்திகை தீபத்தன்று அரசு உணவுகட்டுப்பாடு துறை வழிகாட்டுதல்படி அன்னதான கூடங்கள் செயல்பட எங்கள் குழு பணி செய்கிறது.

ஒரு நேரமாவது
தீபம் ?

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்களில் ஒரு நேர தீபம் கூட ஏற்ற முடியாத நிலை உள்ளது. உதவ மனம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

உழவார பணி என்றால் என்ன?

சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்

  • பக்தர்கள் தங்கள் வீட்டு துன்பங்கள் நீங்காமல் இருக்க காரணம் அவர்கள் கோயிலில் போடும் குப்பைகளே.
  • அக்குப்பைகளை சுத்தம் செய்தல்.
  • பக்தர்களுக்கு  இறைவன் அருள் கிடைக்காமல் போக காரணமான தூண்களில் திருநீறு போட்டதை சுத்தம் செய்வது
  •  இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மாலிய பூக்களை நந்தவனத்தில் போடும் பணி.
  •  திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..
  • சுவாமியின் ஆடைகளை துவைப்பது.
  • அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.
  • நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.
  • தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தபடுத்துவது
  •  கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.
  • சிவாச்சாரிகளின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.
  • 63 வர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.
  •  திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.
  • திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.
  •  திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.
  • கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.
  • கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..
  • சுவாமியின் வாகனங்களை சுத்தம் செய்து தருதல்.

போன்ற  பணிகளே உழவாரப் பணி ஆகும்.

இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும், மனதும் வலிமை பெறும்.

உழவாரபணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை என்பது அடியார்களின் அனுபவம்.

நமசிவாய வாழ்க